தீவிர சூறாவளி புயலாக வலுப்பெறும் சித்ரங் - கனமழையால் பாதிப்பிற்கு வாய்ப்பு

x

சித்ரங் சூறாவளி புயல், சாகர் தீவு பகுதியில் இருந்து தெற்கே 300 கி.மீ. தொலைவிலும், பரிசால் பகுதியில் இருந்து 580 கி.மீ. தெற்கு-தென்மேற்கிலும் மையம் கொண்டுள்ளது. இந்த புயல், அடுத்த 12 மணிநேரத்தில் தீவிர புயலாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மேற்கு வங்கத்தின் வடக்கு மற்றும் தெற்கு 24 பர்கானஸ் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்டங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால் மேற்கு வங்க மாநிலம் கடலோர பகுதிகளில் முன்னேற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்