சூறைக்காற்றுடன் பெய்த கனமழை.! - சாலையில் விழுந்த ராட்சத மரங்கள்

x

கரூரில் காலை முதலே வெயில் வாட்டி வதைத்த நிலையில், மாலை நேரத்தில் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்...

ஓசூர் அருகே தேன்கனிக்கோட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் கடந்த சில தினங்களாக நீடித்து வந்த வெப்பம் தணிந்தது..

இதே போல் கோவை மாவட்டம் சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது..

ஒட்டன்சத்திரம் அருகே உள்ள காமாட்சிபுரம் பகுதியில் காற்றுடன் கனமழை பெய்தது.. சுமார் ஒரு மணி நேரம் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழல் நிலவியது..

திண்டுக்கல் மாவட்டம் பழனி கொடைக்கானல் சாலையில் சூறாவளிக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதில் கொடைக்கானல் மலை அடிவாரத்தில் வீரமாத்தி அம்மன் கோவில் அருகே ராட்சத மரம் ஒன்று சூறாவளி காற்றில் சாலையின் குறுக்கே விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட வாகன நெரிசல் காரணமாக, கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகள் சிரமத்தில் ஆழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்