சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

x

சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை ஆய்வு மையம் தகவல்

வடகிழக்கு பருவமழை காரணமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சென்னையில் வியாழக்கிழமை காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை, அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் 33.5 மில்லி மீட்டர் மழையும், நுங்கம்பாக்கத்தில் 35.2 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. சென்னை நகரில் பல இடங்களில் இரவு முழுவதும் கனமழை பெய்தது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்