சென்னையை வெளுக்கும் கனமழை - "இன்னும் கொஞ்சம் அதிகமானால்.."

x

மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யு​ம்​ என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது

அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், சில பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. சென்னை தியாகராயநகர், அண்ணாசாலை, மயிலாப்பூர், ராயப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. சேப்பாக்கம், எழும்பூர் மெரினா, பட்டினப்பாக்கம், புரசைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்தது. மாலை நேரங்களில் பெய்யும் இதுபோன்ற மழையால் மகிழ்ச்சி அடைவதாகவும், மழை பெய்தால் மட்டுமே வெப்பத்திலிருந்து தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்


Next Story

மேலும் செய்திகள்