ஊட்டியில் வெளுத்து கட்டிய கனமழை... மரங்கள் சாய்ந்தன.. சாலைகளில் மண்சரிவு

x

ஊட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் கனமழை வெளுத்து வாங்கியது. அவலாஞ்சி, அப்பர் பவானி, பந்தலூர், எமரால்டு, குந்தா, பாலகொலா, தேவாலா, ஓவேலி, பாடாந்துரை, சேரங்கோடு பகுதிகளில் கனமழை பெய்தது. அவலாஞ்சி சாலையில் அடிக்கடி மரங்கள் சாய்ந்து மண்சரிவு ஏற்பட்டு வருகிறது. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்ததால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர், தீயணைப்பு துறையினர், மின்துறையினர் போர் கால அடிப்படையில் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். அவலாஞ்சியில் நீர்வீழ்ச்சி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் அணைக்கட்டு நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்