15 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம் தகவல்

x

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர்,....

ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டு உள்ளது.

வருகிற 12ம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்,

சென்னையில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று அதில் கூறப்பட்டு உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம், கிருஷ்ணகிரி மாவட்டம் ஜம்புகுட்டப்பட்டியில் தலா 7 சென்ட்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.



Next Story

மேலும் செய்திகள்