வெளுத்து வாங்கிய கனமழை - நிலச்சரிவால் மண்ணில் புதைந்த வீடுகள்

x

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் நிலச்சரிவில் வீடுகள் சேதம் அடைந்தன. கனமழையால் வெனிசுலாவின் தலைநகரான கராகஸில் நிலச்சரிவு ஏற்பட்டு 12 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. மேலும் நூற்றுக்கும் அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். மேலும் 60க்கும் அதிகமான வீடுகள் நிலச்சரிவால் எந்நேரமும் சேதம் அடையலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்