வீட்டிற்குள் புகுந்த வெள்ளம்- தூங்கி கொண்டிருந்த மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்

x

ஈரோடு மாநகர பகுதியில் நேற்று இரவு விடிய விடிய இடியுடன் கூடிய கன மழை பெய்தது, இதன் காரணமாக பெரும்பள்ளம் ஓடைப்பகுதி ஒட்டி உள்ள ஸ்டேரனி பிரிட்ஜ், அசோகபுரி பகுதிகளில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. அசோகபுரி பகுதியை சேர்ந்த 65 வயது ரங்கம்மாள் எனும் மூதாட்டி வீட்டில் வெள்ள நீர் புகுந்தது. ரங்கம்மாள் தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக இறந்தார். இது குறித்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர், ரங்கம்மாள் இறந்தது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், ரங்கம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த


Next Story

மேலும் செய்திகள்