தனக்கு வந்த இதய நோயால் 9ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் இதய நோயால் பாதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

ஆம்பூர் அழகாபுரி குண்டாலம்மன் கோயில் தெருவை சேர்ந்த கௌரவநாதன் சென்னையில் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார்.

இவரது மகள் கயல்விழி ஓசூர் தேன்கனிக்கோட்டையில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கயல்விழிக்கு, கடந்த 2018 ஆம் ஆண்டு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், கடந்த 4 ஆண்டுகளாக அவர் தீராத இதய நோயால் அவதியடைந்து வந்த நிலையில், நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில்

தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த ஆம்பூர் போலீசார் மாணவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்