Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-07-2023) | Morning Headlines | Thanthi TV
- வரும் 22-ம் தேதி, காலை 10.30 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம்...... மகளிர் உரிமைத்தொகை, ஆளுநர் செயல்பாடு, அமலாக்கத் துறை சோதனை உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல்.........
- மணிப்பூர் கலவரத்தின் போது, பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ வெளியானதால் அதிர்ச்சி... கடந்த மே மாதம் வன்முறை உச்சத்தில் இருந்தபோது, சம்பவம் நடந்ததாக தகவல்..
- டாஸ்மாக்கில் இறக்குமதி செய்யப்படும் வெளிநாட்டு மதுபானங்களின் விலை இன்று முதல் உயர்வு..... குவார்ட்டருக்கு 10 ரூபாய் முதல், புல் பாட்டிலுக்கு 320 ரூபாய் வரை உயர்த்தி அறிவிப்பு.....
- இந்துக்களுக்கு புனித நூல் எதுவும் கிடையாது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேச்சு... கிறிஸ்தவர்களுக்கு பைபிளும், முஸ்லிம்களுக்கு குரானும் புனித நூலாக உள்ளதாகவும் கருத்து...
Next Story