இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (08-06-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines
Published on

ஒற்றைத் தலைமை கட்சி விதிகளுக்கு எதிராக இல்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் வாதம்....

அதிமுக பொதுக்குழு, பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த மேல் முறையீட்டு வழக்குகள் மீது நாளை மீண்டும் விசாரணை.....

மத்திய பிரதேசத்தில் 300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது குழந்தை......

55 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் மீட்கப்பட்டும் உயிரிழந்த சோகம்.... 

ஆவினில் சிறார்களை பணியமர்த்திய அத்தனை பேர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்...

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தல்.....

தமிழகத்தில், வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை.....

அனைத்து இலவச மின்சார சலுகைகளும் தொடரும் என மின்சார வாரியம் அறிவிப்பு.....

வணிக மற்றும் தொழில் அமைப்புகளுக்கு மட்டுமே மிகக் குறைந்த அளவில் மின்கட்டணம் உயரும் என தகவல்....

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சூறைகாற்றுடன் மழை....

சாலையில் மரங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு....

யார் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் சிறந்த மாநிலமாக தலை நிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு....

ஒரகடம் நிகழ்ச்சியில், ஆளுநர் ஆர்.என்.ரவியை சூசகமாக விமர்சித்து முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.....

டாஸ்மாக் கடைகளில் திரும்பப் பெறப்படும் பாட்டில்களை விற்பனை டெண்டர் விதிகள் குறித்து சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி....

டெண்டர் விதிகள், விலை பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு... 

X

Thanthi TV
www.thanthitv.com