Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (28-05-2023) | Morning Headlines | Thanthi TV
டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டடத்தை இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...
25 அரசியல் கட்சியினர் பங்கேற்பு... காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட 19 கட்சிகள் புறக்கணிப்பு...
தமிழ்நாட்டில் தயாரான செங்கோல் புதிய நாடாளுமன்றத்தில் நிறுவப்படுகிறது.....
பிரதமர் மோடியிடம் செங்கோலை ஒப்படைத்தார் திருவாவடுதுறை ஆதீனம்....
வருமான வரிச் சோதனையில் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டால் நடவடிக்கை எடுக்கலாம் என அமைச்சர் செந்தில் பாலாஜி பேட்டி....
அதிகாரிகள் யாரையும் பணி செய்ய விடாமல் தடுக்கவில்லை என்றும் விளக்கம்.....
எத்தனை வருமான வரித்துறை சோதனை வந்தாலும் தாங்கும் வலிமை உள்ளது...
நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெல்வோம் என அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி...
ஆவினில் பால் கையாளும் திறனை நாள்தோறும் 70 லட்சம் லிட்டராக உயர்த்த அமைச்சர் மனோ தங்கராஜ் உத்தரவு....
காலி நிலங்களில் பசுந்தீவன உற்பத்தியை மேற்கொள்ளவும் அறிவுறுத்தல்....
தேனி மாவட்டம் கம்பம் நகருக்குள் புகுந்த அரிக்கொம்பன் யானை இரவு நேரத்தில் யானையை பிடிப்பதில் வனத்துறைக்கு சிக்கல்...
கும்கிகள் மூலம் அரிக்கொம்பனை பிடிக்கும் பணிகள் மும்முரம்...
மாமன்னன் படத்தின் 2வது பாடல் வெளியீடு....
ஏ.ஆர்.ரகுமான் குரலில் ஒலிக்கும் "ஜிகுஜிகு ரயிலு" பாடல்....
ஐபிஎல் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் - சென்னை அணிகள் இன்று பலப்பரீட்சை....
சாம்பியன் பட்டம் வெல்லப்போவது யார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பு....
