இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (26-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

டெல்லியில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டடம்...

புதிய நாடாளுமன்றத்தின் உள்புற காட்சிகள் வெளியீடு...


புதிய நாடாளுமன்ற கட்ட‌டம் குறித்த சிந்தனைகளை பகிருங்கள்...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்...


புதிய நாடாளுமன்ற கட்டடம் வரும் 28-ம் தேதி திறக்கப்படும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..

டெல்லி எல்லைகளை சீல் வைக்க போலீசார் முடிவு... போராட்டங்கள் நடத்தவும் தடை...


இந்தியாவில் தமிழகம் ஜப்பானிய முதலீட்டுக்கு உகந்த மாநிலம்...

உள்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டங்களில் முதலீடு செய்யுமாறு, ஜப்பானிய நிறுவனங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு....


டாஸ்மாக் கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யக் கூடாது...

அமைச்சர் செந்தில் பாலாஜி உத்தரவு...


டாஸ்மாக் மற்றும் மின்துறை ஒப்பந்ததாரர்கள் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை....

சென்னை, கோவை உள்பட 40 இடங்களில் ரெய்டு....


கரூர் ராமகிருஷ்ணாபுரம் அருகே திமுக தொண்டரை அதிகாரிகள் தாக்கியதாக புகார்..

மயக்கம் அடைந்த தொண்டர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதி...


புதுச்சேரி அரசுப் பள்ளிகளில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பு...

புதுச்சேரி கல்வி துறை இயக்குனர் பிரியதர்சினி உத்தரவு...


சென்னை அம்பத்தூரில், மின்சாரம் தாக்கி 8 வயது சிறுவன் பலி...

மழையின்போது அறுந்து தொங்கிய மின் கம்பியை சிறுவன் தொட்டதால் நிகழ்ந்த விபரீதம்...


Next Story

மேலும் செய்திகள்