இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (25-05-2023) | 11 PM Headlines | Thanthi TV | Today Headlines

x

சட்டீஸ்கரில் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை ஆளுநரை அழைக்காமல், சோனியா காந்தியை திறக்க அ​னுமதித்தது குறித்து எதிர்க்கட்சிகள் வாய்திறக்காதது ஏன்?

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி....


புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் குடியரசுத் தலைவரின் உரிமை பறிப்பு.....

எதை வெளிப்படுத்த விரும்புகிறீர்கள் என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வி....


திரெளபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டதில் எதிர்க்கட்சிகளின் பங்கு என்ன?

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கேள்வி...


சிங்கப்பூர் பயணத்தை முடித்து விட்டு ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்...

ஜப்பான் நாட்டின் இந்தியத் தூதர் மலர்க்கொத்து வழங்கி வரவேற்றார்....


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் திடீரென கொட்டித் தீர்த்த கனமழை.....

அந்தியூர், வாணியம்பாடி எடப்பாடி பகுதிகளில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்தது....


விழுப்புரம் ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் இருவர் சாராயம் குடிக்கும் காட்சிகள் வைரல்....

விஷச் சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்த சுவடு கூட மறையாத நிலையில், மதுப்பிரியர்கள் அட்டகாசம்...


தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் இலவச மதிய உணவு வழங்க ஏற்பாடு.....

மே 28ம் தேதி உலக பட்டினி தினத்தையொட்டி, பசிப்பிணியை போக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை...


உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலனை பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொன்ற கொடூரம்....

2வது கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டிய இளம்பெண் கைது.....


Next Story

மேலும் செய்திகள்