Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (21-05-2023) | Morning Headlines | Thanthi TV

x

ராஜஸ்தான் தலைமைச்செயலகத்தில் கட்டுக்கட்டாக பணம், தங்க நகைகள் மீட்கப்பட்டதால் அதிர்ச்சி....

2 கோடியே 31 லட்சம் ரூபாயை பதுக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அம்மாநில அமைச்சர் பிரதாப் சிங் பேட்டி....


50 மிக்-21 ரக விமானங்களின் பயன்பாடு தற்காலிகமாக நிறுத்தம்...

ராஜஸ்தான் விபத்து எதிரொலியாக நடவடிக்கை என விமானப்படை அதிகாரிகள் தகவல்...


இந்தோ பசிபிக் பிராந்தியத்தின் பாதுகாப்பும் வெற்றியும் ஒட்டுமொத்த உலகிற்கே அவசியமானது...

குவாட் நாடுகளின் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு...


எவரெஸ்ட் சிகரம் ஏறி சாதனை படைத்த தமிழக இளைஞர் ராஜசேகர் பச்சைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பாராட்டு...

பல்வேறு விளையாட்டுகளிலும் நம் இளைஞர்கள் முத்திரை பதித்து நம்மையும் தமிழ்நாட்டையும் பெருமிதம் கொள்ளச் செய்வதாக பெருமிதம்...


கர்நாடக தேர்தல் தோல்வியை மறைக்கவே இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிப்பு....

மத்திய அரசு மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு....


2 ஆயிரம் ரூபாய் நோட்டு திரும்பப் பெறப்பட்ட நிலையில், மீண்டும் ஆயிரம் ரூபாய் நோட்டு அறிமுகப்படுத்தப்படுகிறதா?...

பொதுமக்களிடையே எதிர்ப்பார்ப்பு...


தமிழக அரசை டாஸ்மாக் அரசு என்றுதான் கூற வேண்டும்....

பாஜக மகளிர் அணி நிர்வாகியும், நடிகையுமான நமீதா விமர்சனம்....


ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக கொட்டிய கனமழை...

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் ஆலங்கட்டி மழையுடன் 2 மணிநேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் மக்கள் மகிழ்ச்சி...


இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமினுக்கு எதிராக 18வது நாளாக நீடிக்கும் போராட்டம்....

டெல் அவிவில் நடந்த போராட்டத்தின் கழுகுப் பார்வை காட்சிகள் வெளியீடு...


இத்தாலியில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு....

ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து தவிப்பு...


ஐபிஎல் தொடரில் டெல்லியை வீழ்த்தி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சென்னை அணி...

கொல்கத்தாவுக்கு எதிரான மற்றொரு லீக் ஆட்டத்தில் த்ரில் வெற்றி பெற்ற லக்னோவும் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற்றம்...


சென்னை சேப்பாக்கதில் 23ம் தேதி நடைபெறும் பிளே ஆஃப் முதல் சுற்றில் குஜராத் - சென்னை அணிகள் பலப்பரீட்சை....

மற்றொரு ப்ளே ஆஃப் சுற்றில் லக்னோவுடன் மோதப்போவது யார் என இன்று தெரிந்துவிடும்.....


Next Story

மேலும் செய்திகள்