Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (20-05-2023) | Morning Headlines | Thanthi TV
புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் திரும்ப பெறப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி அறிவிப்பு...
2000 நோட்டுகள் தொடர்ந்து சட்டப்படி செல்லும் என்றும், அதை பயன்படுத்த தடையில்லை என்றும் விளக்கம்...
ஆயிரம் ரூபாய் நோட்டை மத்திய அரசு மீண்டும் அறிமுகப்படுத்தும்...
முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கருத்து....
கர்நாடக முதல்வராக சித்தராமையா இன்று பதவி ஏற்கிறார்...
துணை முதல்வராக டி.கே.சிவகுமார் மற்றும் 15 அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளதாக தகவல்...
முதல்வராக பதவியேற்றதும் முதல் அறிவிப்பாக, இல்லத்தரசிகளுக்கு மாதம் 2000 ஆயிரம் வழங்கும் திட்டத்தில் கையெழுத்திடுகிறார், சித்தராமையா...
200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட 5 திட்டங்களில் கையெழுத்திடுவார் எனவும் தகவல்...
வெப்ப அலையின் தாக்கம் அதிகரிக்கும் முன்பாக, 100 நாள் வேலை திட்ட பணியாளர்கள் வேலையை முடிக்குமாறு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதி ர்கொள்ள அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு அறிவுரை...
பதவிக்காகவோ, பொறுப்பிற்காகவோ தனது கொள்கை மாறாது என அமைச்சர் பி.டிஆர் பழனிவேல் தியாகராஜன் உறுதி...
தனி மனித கொள்கையும் தத்துவமும் என்றும் மாறாது எனவும் பேச்சு...
பொறியியல் படிப்புகளுக்காகன கலந்தாய்வு ஜூலை 2ஆம் தேதி துவங்குகிறது..
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தகவல்...
டெல்லி அணியுடன் இன்று பிற்பகலில் நடைபெறும் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்...
இன்று இரவு கொல்கத்தாவுடன் நடைபெறும் மற்றொரு போட்டியில் லக்னோ அணி வெற்றி பெற்றால் அந்த அணிக்கும் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பு...
