இன்றைய தலைப்பு செய்திகள் (25-04-2023) | 9 PM Headlines | Thanthi TV | Today Headlines
கேரளாவில் வந்தே பாரத் ரயில், வாட்டர் மெட்ரோ சேவை உள்ளிட்ட திட்டங்களை இன்று தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி...
--------------------
ரயில் பயணத்தில் பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடல்...
கேரளாவின் வளர்ச்சிதான் இந்தியாவின் வளர்ச்சி என கருத்து...
--------------------
வி.ஏ.ஓ. படுகொலை - ரூ.1 கோடி நிதியுதவி
தூத்துக்குடி அருகே இன்று கிராம நிர்வாக அலுவலகத்தில் புகுந்து விஏஓ லூர்து பிரான்சிஸ் சரமாரியாக வெட்டிக்கொலை...
ரூ. 1 கோடி நிதியுதவி, குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
கடமையை நிறைவேற்றியதற்காக உயிரிழந்த கிராம நிர்வாக அலுவலரின் பொறுப்புணர்வை அரசு போற்றுவதாக உருக்கம்...
---------------------
டி.என்.ஏ. சோதனை - 8 பேர் மறுப்பு
வேங்கைவயல் வழக்கில் சந்தேகிக்கப்படும் நபர்களுக்கு டி.என்.ஏ பரிசோதனைக்கு மேற்கொள்ள நடவடிக்கை...
காவலர் முரளிராஜா உள்பட 3 பேர் இன்று ஆஜரான நிலையில், 8 பேர் ஆஜராக மறுப்பு...
-----------------
புகையிலை பொருட்கள் - தடை நீட்டிப்பு
தமிழகத்தில் புகையிலை பொருட்களின் மீதான தடை நீட்டிப்பு...
மீறினால் சட்டப்படி நடவடிக்கை பாயும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று எச்சரிக்கை....
-------------------------
ஆபரேஷன் காவேரி - நாடு திரும்பும் இந்தியர்கள்
ஆபரேஷன் காவேரி மூலம் சூடானில் இருந்து இந்தியர்களை மீட்கும் பணி தீவிரம்...
முதல்கட்டமாக 278 பேர் சுமேதா கப்பல் மூலம் இன்று இந்தியாவுக்கு புறப்பட்டனர்...
--------------------
கர்நாடக தேர்தல் - தீவிர பிரசாரம்
கர்நாடகாவில் மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் இன்று தீவிர பிரசாரம்...
வன்முறை வார்த்தைகளை நம்பாமல் மனசாட்சியை பார்த்து வாக்களிக்க வேண்டும் என பிரியங்கா காந்தி வேண்டுகோள்...
காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைத்தால் ஊழல், குடும்ப ஆட்சி நிரந்தரம் ஆகி விடும் என அமித்ஷா கடும் தாக்கு...
