Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (17-04-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • திமுகவினரின் சொத்து பட்டியல் வீடியோவை நீக்கி விட்டு மன்னிப்பு கேட்காவிட்டால், 500 கோடி ரூபாய் இழப்பீடு கேட்டு வழக்கு தொடரப்படும்... 48 மணி நேரம் கெடு விதித்து, பாஜக தலைவர் அண்ணாமலைக்கு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ்...


  • கொள்கை என்பது வேறு.. கூட்டணி என்பது வேறு... என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேச்சு... அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு கூட்டணி அமைப்போம் எனவும் அறிவிப்பு...


  • தமிழகத்தில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும்... சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


  • ராமநாதபுரம் மாவட்ட பாஜக தலைவரை தாக்க முயற்சி... சென்னையை சேர்ந்த கூலிப்படையினர் 2 பேர் கைது...


  • நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வென்றார், நடிகர் மாதவனின் மகன் வேதாந்த்... மலேசியாவில் நடைபெற்ற போட்டியில் 17 வயதுக்குட்பட்டோருக்கான பிரிவில் அசத்தினார்...

  • ஐபிஎல் தொடரில் சென்னை-பெங்களூரு அணிகள் இன்று மோதுகின்றன... பெங்களூரு மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி துவங்குகிறது...

Next Story

மேலும் செய்திகள்