இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (06-04-2023) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
ஒரு தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் வைத்திருந்தால் நிராகரிப்பதாக பொருள்...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி பேச்சு...
---
சட்டமன்ற நடைமுறைகள் தொடர்பாக, ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்த கருத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்...
மாநில நலனுக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு...
---
மாநில அரசின் சுருக்கெழுத்தர்தான் ஆளுநர் என்பதை மறந்துவிட்டு, தி கிரேட் டிக்டேட்டராக ஆளுநர் தன்னை நினைத்துக்கொள்ள வேண்டாம்...
தான் சொன்ன கருத்தை ஆளுநர் திரும்பப் பெறுவதே, பதவிப்பிரமாணத்திற்கு உண்மையாக நடந்துகொள்வதாகவும் என முதல்வர் ஸ்டாலின் கருத்து...
---
கிடப்பில் இருந்தால் நிராகரிக்கப்பட்டதாகவே அர்த்தம் என ஆளுநர் பேசுவது, அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்...
ரகசிய காப்பு பிரமாணம் எடுத்தவர், நிர்வாக ரீதியான நிலைப்பாடுகளை பொதுவெளியில் அலட்சியமாக பேசுவது அரசியல் சட்ட வரையறைகளை மீறிய செயல் என்றும் கருத்து...
---
நிலுவையில் வைப்பதன் மூலம் ஆளுநர் ஒரு தீர்மானத்தை நிராகரிப்பது என்பது வரலாற்றில் நடந்தது இல்லை...
திமுக எம்.பி. திருச்சி சிவா பேச்சு...
---
ஸ்டெர்லைட் ஆலை குறித்து
ஆளுநர் பேசியிருப்பது ஆணவத்தின் உச்சம் என மதிமுக பொது செயலாளர் வைகோ கண்டனம்...
வெளிநாடுகளிலிருந்து பணம் வாங்கிக் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்ததாக அதிகார திமிரில் ஆளுநர் உளறுவதாகவும் குற்றச்சாட்டு...
----
ஸ்டெர்லைட் ஆலையை மூடியது குறித்து பேசியுள்ள தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, அதற்கான ஆதாரங்களை தர வேண்டும்...
திமுக எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்...
---
பிரதமரின் வருகையையொட்டி, சென்னையில், 5 அடுக்கு பாதுகாப்பு... 22 ஆயிரம் போலீசார் தீவிர கண்காணிப்பு...
தங்கும் விடுதிகளில் போலீசார் சோதனை... ட்ரோன்கள், ஆளில்லா விமானங்கள் பறக்க தடை...