Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (05-04-2023) | Morning Headlines | Thanthi TV

x

கொரோனா பரவல் அதிகரிப்பால், தமிழகத்தில் இன்று முதல் பொது இடங்களில் முகக் கவசம் அணிய வேண்டும்...

பொதுமக்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தல்...


காரைக்காலை தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா காரணமாக ஒருவர் உயிரிழப்பு...

நேற்று ஒரு நாளில் மட்டும் தமிழகத்தில் 198 பேருக்கு தொற்று பாதிப்பு...


நிலக்கரி சுரங்க ஏல நடைமுறையில் இருந்து டெல்டா பகுதிகளை விலக்கிட வேண்டும்...

பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் ​ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தல்...


தேசிய அளவில் எதிர்க்கட்சிகளை திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஒருங்கிணைக்கிறாரா?...

தந்தி டி.வியின் ஆயுத எழுத்து நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி விளக்கம்...


ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் ஜாமின்...

பல நிபந்தனைகளை விதித்த சூரத் மாவட்ட நீதிமன்றம்...


பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கடலூர் அருகே பறக்கும் காவடி எடுத்த பக்தர்கள்...

அலகு குத்தி, கிரேனில் தொங்கியபடி நேர்த்திக்கடன் நிறைவேற்றம்...


கேரள ரயிலில் தீ வைப்பு சம்பவம் குறித்து, விசாரணையில் களம் இறங்கிய என்ஐஏ அதிகாரிகள்...

தீ வைக்கப்பட்ட பெட்டிகளில் நேரில் ஆய்வு...


ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில், அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கைது...

நியூயார்க் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜரான நிலையில், கைது செய்யப்பட்டார்....


டெல்லி - குஜராத் ஐ.பி.எல் போட்டியை நேரில் பார்க்க மைதானத்திற்கு வந்த ரிஷப் பண்ட்...

கார் விபத்தால் ஏற்பட்ட காயத்திலிருந்து குணமடைந்துவரும் நிலையில், நேரில் வந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சி...


ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 7 வது லீக் போட்டியில் குஜராத் அணி வெற்றி....

டெல்லி அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபாரம்....


Next Story

மேலும் செய்திகள்