Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (27-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

நாடாளுமன்றத்தில் இன்று கருப்பு உடையில் பங்கேற்பதாக காங்கிரஸ் எம்.பி.க்கள் அறிவிப்பு...

ராகுல் காந்தி தகுதி நீக்கம் மற்றும் அதானி விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்...


"இந்த நாட்டின் பிரதமர் ஒரு கோழை" என சத்தியாகிரக போராட்டத்தில் பிரியங்கா காந்தி ஆவேசம்...

இதை சொன்னதற்கு என்னை வேண்டுமானால் சிறையில் போடுங்கள், எனவும் பேச்சு...


தமிழக சட்டப்பேரவையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் இன்று உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு...

இன்று இரவு பேரவையிலேயே தங்குவதாக கட்சியின் சட்டப்பேரவை தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு...


அதானியிடம் உள்ள சொத்துகள், பிரதமர் மோடியின் சொத்தா என காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி...

கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாததால் ராகுல்காந்தியை நாடாளுமன்றத்திற்குள் விட மறுத்துள்ளதாகவும் குற்றச்சாட்டு...


டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, அளவையர் மற்றும் வரைவாளர் தேர்வுகளில் குளறுபடிகள் நடந்ததாக குற்றச்சாட்டு...

வாழ்வை தொலைத்து விட்டோமோ என தேர்வு எழுதியவர்கள் வேதனை...


தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை...

வரும் 30ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்...


சென்னை மாநகராட்சியின் 2023-24 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்கிறார் மேயர் பிரியா ராஜன்...

முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு...


ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான நேரடி மற்றும் ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று துவக்கம்...

சென்னை சேப்பாக்கத்தில் குவிந்த ரசிகர்கள்...


சர்வதேச மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 75 கிலோ பிரிவில், தங்கம் வென்றார், இந்திய வீராங்கனை லவ்லினா...

50 கிலோ பிரிவில் நடைபெற்ற போட்டியில், மற்றொரு இந்திய வீராங்கனை நிஹத் சரீன் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்...


மகளிர் ப்ரீமியர் லீக் டி.20 தொடரில், சாம்பியன் பட்டம் வென்றது, மும்பை அணி.....

இறுதிப்போட்டியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தி அபாரம்....


முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி கோவளத்தில் கோலாகலமாக நடைபெற்ற படகு போட்டி...

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...


Next Story

மேலும் செய்திகள்