Today Headlines | மதியம் 1 மணி தலைப்புச் செய்திகள் (19.03.2023) | 1 PM Headlines | Thanthi TV

x
  • அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தலாம், முடிவுகளை மார்ச் 24ம் தேதி வரை வெளியிட கூடாது.... பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு...


  • நிரந்தர பொதுச்செயலாளராக ஜெயலலிதாவை அறிவித்துவிட்டு, தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது..பொதுச்செயலாளர் தேர்தலுக்கு எதிரான வழக்கில் ஓபிஎஸ் தரப்பு வாதம்....


  • உள்கட்சி விவகாரங்களில் நீதிமன்றம் தலையிட கூடாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக ஈபிஎஸ் தரப்பு வாதம்...தேர்தல் நடைமுறை துவங்கி விட்டால் நீதிமன்றம் தலையிட முடியாது என்றும் கருத்து...


  • ஜம்மு காஷ்மீரில், எல்லைப்பகுதி வழியாக, பாகிஸ்தானிலிருந்து இந்திய பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை... ராம்கார் குடியிருப்புவாசிகளுக்கு பாதுகாப்பு படையினர் எச்சரிக்கை...

  • துருக்கியின் கோக்சுன் மாவட்டத்தில் நிலநடுக்கம்...ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளி 4 அலகுகளாக பதிவானதாக தகவல்...

Next Story

மேலும் செய்திகள்