Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (14-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

திருச்சி மாவட்டத்தில் 7 பேர் இன்புளூயன்சா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்...

ஆட்சியர் பிரதீப் குமார் தகவல்...


பிளஸ் 2 தமிழ் உள்ளிட்ட மொழித் தேர்வில் சுமார் 50 ஆயிரம் மாணவர்கள் ஆப்சென்ட்...

பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சித் தகவல்...


தமிழகம் மற்றும் புதுச்சேரியில்,11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் இன்று தொடங்குகின்றன...

7 லட்சத்து 88 ஆயிரத்து 64 பேர் தேர்வு எழுதுகின்றனர் ...


திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 22ம் தேதி நடப்பதாக கட்சி பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு...

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு தொடக்க விழா தொடர்பாக ஆலோசனை எனத் தகவல்...


அதிமுகவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலவதியாகிவிட்டதா? இல்லையா?....

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி...


காலியாகிக் கொண்டிருக்கும் அதிமுகவை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள்...

அண்ணாமலை பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு பாஜக பதிலடி...


அரசு வேலைக்காக போலி சாதிச்சான்று அளித்து, இட ஒதுக்கீட்டு கொள்கையை சுரண்டுவோரை தண்டிக்காமல் விடக்கூடாது...

சென்னை உயர்நீதிமன்றம் கருத்து...


கேரள குப்பை பிரச்சினை குறித்து முதல்வர் பினரயி விஜயனுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன் நடிகர் மோகன்லால் எழுதிய கடிதம்...

கொச்சி தீ விபத்து விவகாரம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், சமூக வலைத்தளங்களில் மீண்டும் பரவுகிறது...


இந்திய கிரிக்கெட்டின் நலனுக்காக அஸ்வினும், ஜடேஜாவும் நீண்ட காலம் விளையாட வேண்டும்...

இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா விருப்பம்...


இலங்கைக்கு எதிரான கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி வெற்றி...

நியுசிலாந்தின் வெற்றியால், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியா, சர்வதேச டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது...


டிராவில் முடிந்தது, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்காவது டெஸ்ட் போட்டி...

2-க்கு ஒன்று என்ற புள்ளிக் கணக்கில் பார்டர்- கவாஸ்கர் கோப்பையை தக்க வைத்தது இந்தியா...


Next Story

மேலும் செய்திகள்