Today Headlines | காலை 6 மணி தலைப்புச் செய்திகள் (10-03-2023) | Morning Headlines | Thanthi TV

x

ஆன்லைன் ரம்மி தடை மற்றும் பட்ஜெட்டில் வெளியாகும் அறிவிப்புகள் குறித்து தமிழக அமைச்சரவையில் ஆலோசனை...முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் பங்கேற்றனர்...

சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா மீண்டும் நிறைவேற்றப்படும் என சட்ட அமைச்சர் ரகுபதி அறிவிப்பு..ஆளுநருக்கு மீண்டும் மசோதா அனுப்பி வைக்கப்படும் எனவும் உறுதி...

நாடு முழுவதும் தடை செய்யப்பட வேண்டிய ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்வதில், தமிழ்நாடு முதல் மாநிலமாக முன்னெடுக்கிறது..புதிய சட்டம் உருவாக்க தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லையென கூறுவதை ஏற்க முடியாது எனவும் அமைச்சர் ரகுபதி விளக்கம்...

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் விவகாரத்தில் ஆளுநரைக் கண்டித்து இன்று ஆர்ப்பாட்டம்...ஊட்டியில் ஆளுநர் தங்கியுள்ள நிலையில், அங்குள்ள ஆளுநர் மாளிகை முன்பாக இடதுசாரிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் போராட்டம் நடத்துகின்றனர்...

அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கான தேர்தலை, ஒரு மாதத்திற்குள் நடத்த திட்டம்..அதிமுக தலைமை முடிவு செய்துள்ளதாக தகவல்..

கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது கிடையாது என்பதால் எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம் என முன்னாள் அமைச்சர் செல்லுர் ராஜு கருத்து..அதிமுகவினருக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது எனவும் உறுதி...

அதிமுக, பாஜக கூட்டணி வலிமையாக உள்ளதாக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் கருத்து...இரு தரப்பிலும் விமர்சனம் செய்வது அரசியலில் சகஜம் எனவும் விளக்கம்..

எந்தவொரு பாஜக தொண்டனும் சிறைக்கு செல்ல அஞ்சப்போவதில்லை என மாநில தலைவர் அண்ணாமலை அறிக்கை...பொது நீதிக்காகவும் நியாயத்துக்காகவும் குரல் கொடுத்தால் வழக்கு போடுவதா எனவும் கேள்வி...

சட்டமன்றத்தைப் போல், நாடாளுமன்றமும் திமுக வசமாக வேண்டும்...கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் விருப்பம்..

வடமாநிலத்தவருக்கு தமிழகத்தில் வாக்குரிமை கொடுப்பது தவறில்லை...காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கருத்து...

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாஜக அலுவலகங்கள் இன்று திறப்பு...கிருஷ்ணகிரியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திறந்து வைக்கிறார்...


Next Story

மேலும் செய்திகள்