இன்றைய தலைப்பு செய்திகள் (26-11-2022) | 11 PM Headlines | Thanthi TV

x

அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து நாட்டை முன்னோக்கி எடுத்துச்செல்ல வேண்டும்...

அரசியலமைப்பு நாளையொட்டி முதலமைச்சர் ஸ்டாலின் டுவிட்டரில் வலியுறுத்தல்...

---

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வரும் 28 முதல் டிசம்பர் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம்....

பண்டிகை நாட்கள் தவிர அனைத்து நாட்களிலும் சிறப்பு முகாம்கள் செயல்படும் என

மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவிப்பு....

----

மின் இணைப்பை ஆதாருடன் இணைப்பதால் வீடுகளுக்கான 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதில் பாதிப்பில்லை....

மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி

---

மின் இணைப்புடன் ஆதாரை இணைக்குமாறு மின் நுகர்வோரை திமுக அரசு துன்புறுத்துவதாக ஓபிஎஸ் குற்றச்சாட்டு...

6 மாதம் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்...

---

வணிக பயன்பாட்டுக்காக நிலங்களை கையகப்படுத்தும்போது, நிறுவனங்களின் லாபத்தில் நில உரிமையாளர்களுக்கு பங்கு கிடைக்க சட்டம் இயற்ற வேண்டும்....

பரந்தூர் விமான நிலைய திட்டங்களுக்கும் இதனை செயல்படுத்தலாம் என அரசுக்கு மாநில தகவல் ஆணையம் பரிந்துரை....

--

தமிழக காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் எதிரொலி...

சத்தியமூர்த்தி பவனில் நடந்த கருத்தரங்கை மூத்தத் தலைவர்கள் புறக்கணித்ததால் பரபரப்பு....

--

இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது சாத்தியம் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து....

யார் என்ன சாப்பிட வேண்டும் என அரசு நிர்ணயிக்க கூடாது என்றும் வலியுறுத்தல்...

---

விழுப்புரம் அருகே விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து கபடி விளையாடிய அமைச்சர்...

கபடி வீரர்களுடன் ஒன்றாக விளையாடி மகிழ்ச்சி...

--

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் தருவார்....

சட்டத்துறை அமைச்சர் ரகுபதி நம்பிக்கை....

--


Next Story

மேலும் செய்திகள்