இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (17-11-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines

x

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 6 பேர் விடுவிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து மத்திய அரசு மனு...

உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல்....

--------

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய நடவடிக்கை தேவை...

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம்...

--

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் ஒன்று முதல் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு நாளை விடுமுறை...

மாவட்ட ஆட்சியர் லலிதா அறிவிப்பு...

---

காசியில் ஒரு மாத காலம் நடைபெறும் 'காசி தமிழ் சங்கமம்' நிகழ்ச்சி...

நாளை மறுதினம் முறைப்படி தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி...

---

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் பங்கேற்க வாரணாசி செல்லும் தமிழக பிரதிநிதிகள்......

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார், ஆளுநர் ஆர்.என்.ரவி.....

---

பிரிட்டீஷ் ஆதிக்கத்தின்போது சிறைப்பட்ட சாவர்க்கர் விடுதலை ஆவதற்காக மன்னிப்புக் கடிதம் எழுதித் தந்தார்...

ராகுல்காந்தி விமர்சனம்... ராகுல் மீது சாவர்க்கர் பேரன் போலீஸில் புகார்....

---

கூட்டுறவுத்துறை என்றாலே கடன் தள்ளுபடிதானா?- கடன்களை தள்ளுபடி செய்தால் எப்படி ஆட்சி நடக்கும்...

நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கேள்வி...

---

கால்பந்து வீராங்கனை பிரியா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை காவல் துறையினரிடம் மருத்துவ கல்வி இயக்குனரகம் ஒப்படைப்பு...

அடுத்த கட்ட நடவடிக்கையை காவல் துறை மேற்கொள்ளும் எனத் தகவல்...

---

கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்தில் மருத்துவ அறிக்கை வெளியீடு...

மருத்துவர்கள் பால்ராம் சங்கர், சோமசுந்தரம் மீது குற்றச்சாட்டு... விரைவில் 2 மருத்துவர்கள் கைது செய்யப்படுவார்கள் எனத் தகவல்...

--


Next Story

மேலும் செய்திகள்