"ரொம்ப செக்ஸ் டார்ச்சர் கொடுத்தான்.." தீயாய் பரவும் எக்ஸ் காதலன் ஆடியோ - தாம்பரத்தில் கதறிய இளம்பெண்

x

சென்னை குரோம்பேட்டையை சேர்ந்த இளம்பெண் ஒருவர், முன்னாள் காதலன் மீது புகார் அளிக்க தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். கிருஷ்ணன் என்பவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாகவும், தனது அந்தரங்க புகைப்படங்கள் மூலம் கொலை மிரட்டல் விடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் புகாரை வாங்க மறுத்த மகளிர் போலீசார், முகப்பேர் காவல் நிலையத்தில் புகாரளிக்குமாறும், செல்போனை பறித்து துரத்தியதாகவும் பெண் தெரிவித்துள்ளார். பின்பு தாம்பரம் உதவி ஆணையர் சீனிவாசனிடம் பெண் புகாரளித்த நிலையில், புகாரை பெற்றுக் கொண்டு செல்போனை திருப்பி தருமாறு தாம்பரம் மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இதையடுத்து மகளிர் போலீசார் புகாரை பெற்றுக் கொண்ட நிலையில், கிருஷ்ணன் இளம்பெண்ணை போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்