சிறுவர், சிறுமியர்களின் ஆதர்ச நாயகனான ஹாரி பாட்டர்... முதல் நாவல் வெளியானது எப்படி?

x

உலகெங்கும் பல கோடி சிறுவர், சிறுமியர்களின் ஆதர்ச நாயகனான ஹாரி பாட்டர் பற்றிய முதல் நாவல் வெளியான தினம் இன்று.

பிரிட்டனைச் சேர்ந்த ஜோன் ரவ்லிங் மொழிபெயர்பாளராகவும், பள்ளி ஆசிரியராகவும் பணியாற்றிய போது, ஓய்வு நேரத்தில் நாவல்கள் எழுத தொடங்கினார். ஆனால் அவை எதுவும் பதிபிக்கப்படவில்லை.

ஒரு கட்டத்தில் சிறுவர், சிறுமியர்களுக்கான மந்திர தந்திர கதைகளை எழுத முடிவு செய்தார். ஹாரி பாட்டர் என்ற டீன் ஏஞ் சிறுவனை நாயகனாக வடிவமைத்து, ஜே.கே.ரவ்லிங் என்ற பெயரில் தொடர் நாவல்களை 1997 முதல் எழுதத் தொடங்கினார்.

பெற்றோரை இழந்த ஹாரி பாட்டர், அவரின் அத்தை வீட்டில் வளர்வதாக கதை களம் அமைந்திருக்கும். அத்தை, மாமா மற்றும் அவர்களின் மகன் டட்லியிடம் பல கொடுமைகளை அனுப்பவிப்பார்.

11 வயதான பிறகு, தனக்கு மந்திர சக்தி இருப்பதை ஹாரி பாட்டர் உணர்ந்து கொண்ட பின், அவரது வாழ்க்கை பெரிதும் மாறுகிறது.

மந்திரவாதிகளுக்கான ஹாக்வார்ட்ஸ் பள்ளியில் சேர்ந்து அங்கு பல மந்திர வித்தைகளை கற்று தேர்ச்சி பெறுவார் ஹாரி. அவரின் பெற்றோரை, லார்ட் வோல்டெர்மார்ட் என்ற தீய மந்திரவாதி கொன்றான் என்று ஹாரிக்கு தெரிய வரும்.

இதன்பின்னர் லார்ட் வோல்டெர்மார்ட்க்கும் ஹாரி பாட்டருக்கும் ஏற்படும் கடுமையான மோதல்கள், வெற்றி

தோல்விகள் பற்றி அடுத்தடுத்த நாவல்களில் விறுவிறுப்பாக காட்சிப் படுத்தியிருப்பார் ஜே.கே.ரவ்லிங்.

1997 ஜூனில் வெளியான ஹாரி பாட்டரும், தத்துவ ஞானியின் மந்திரக் கல்லும் என்ற முதல் நாவல், பெரும் எண்ணிக்கையில் விற்பனையாகி, உலக அளவில் பிரபலமடைந்தது.

2007 வரை மொத்தம் 7 ஹாரி பாட்டர் நாவல்கள் வெளியாகியுள்ளன. உலகெங்கும் 85 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு, மொத்தம் 60 கோடி பிரதிகள் விற்று, உலக சாதனை படைத்துள்ளன.

எட்டு திரைபடங்களாக இவை தயாரிக்கப்பட்டு, மெகா ஹிட்டாகின. ஜே.கே.ரவ்லிங் இதன் மூலம் சுமார் 9,000 கோடி ரூபாய் ஈட்டியுள்ளார்.

முதல் ஹாரி பாட்டர் நாவல் வெளியான தினம், 1997, ஜூன் 26.


Next Story

மேலும் செய்திகள்