ஹாரியின் சுயசரிதை அருகில்... குடும்பத்தைக் கொல்வது எப்படி?" - "சேட்டை புடிச்ச பையன் சார் இந்த கடைக்காரர்.."

x

ஹாரியின் சுயசரிதை அருகில்... குடும்பத்தைக் கொல்வது எப்படி?" - "சேட்டை புடிச்ச பையன் சார் இந்த கடைக்காரர்.."


புத்தகக் கடையில், "உங்கள் குடும்பத்தைக் கொலை செய்வது எப்படி" என்ற நாவலுக்கு அருகில் பிரிட்டன் இளவரசர் ஹாரியின் சுயசரிதை புத்தகமான "ஸ்பேர்" வைக்கப்பட்டுள்ளது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. அரச கடமைகளைத் துறந்து மனைவி, குழந்தைகளுடன் வெளியேறிய பிரிட்டன் இளவரசர் ஹாரி, தனது சுயசரிதையில் அரச குடும்ப பிரச்சினைகளை அம்பலமாக்கியுள்ளார்... சகோதரர் வில்லியம்ஸுடனான சண்டை, வாக்குவாதங்கள், குடும்ப சிக்கல் குறித்தெல்லாம் விரிவாக பேசியுள்ளார். இந்நிலையில், இங்கிலாந்தில் உள்ள புத்தகக் கடை ஒன்றில் ஹாரியின் சுயசரிதை புத்தகம், "உங்கள் குடும்பத்தைக் கொலை செய்வது எப்படி" என்ற நாவலுக்கு பக்கத்தில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்