காதலிக்க மறுத்த மாணவியைக் கொன்றவருக்கு ஆயுள் சிறை... இளைஞரின் மனு - உயர்நீதிமன்றம் தள்ளுபடி

x

மதுரை, திருமங்கலத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், தன்னை காதலிக்க மறுத்த பள்ளி மாணவியை கடந்த 2018-ஆம் ஆண்டு பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். இதில் உடல் முழுவதும் எரிந்து தீக்காயமடைந்த மாணவி, மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கில் பாலமுருகனுக்கு மதுரை மகளிர் நீதிமன்றம், ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் பாலமுருகன் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு, பெண்களுக்கு தங்கள் விருப்பத்தை முடிவு செய்ய உரிமை உண்டு என்பதை புரியாமல், தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர ஆண்கள் நினைக்கின்றனர் என்று கூறினர். மனுதாரர் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதால், நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதிசெய்யப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், பாலமுருகனின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தன


Next Story

மேலும் செய்திகள்