ஹஜ் புனிதப் பயணம் - வெளியான குட் நியூஸ்

x
  • உலக அளவில் ஹஜ் புனிதப் பயணத்திற்கு அதிக யாத்ரீகர்களை அனுப்பும் 3-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. இந்த ஆண்டு இந்தியாவில் இருந்து 1 லட்சத்து 75 ஆயிரத்து 25 பேருக்கு ஹஜ் புனித பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
  • ஹஜ் புனித பயணம் மேற்கொள்பவர்களுக்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த 3 மாதங்களில் சிறுபான்மையினர் நல அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் 10 ஆலோசனைக் கூட்டங்களை நடத்தியுள்ளன.
  • தேர்வு செய்யப்பட்டுள்ள ஹஜ் பயணிகளுக்கு விரிவான மருத்துவ பரிசோதனை மற்றும் தடுப்பூசி செலுத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ஏப்ரல் முதல் வாரத்தில் சவுதி அரேபியாவுக்கு மருத்துவக்குழுவை அனுப்பி, மெக்கா, மதீனா, ஜெட்டா, அரஃபாத் ஆகிய இடங்களில் தற்காலிக மருத்துவமனைகள் மற்றும் தற்காலிக மருந்தகங்களை அமைப்பது குறித்தும் சுகாதாரத் துறை அமைச்சகம் ஆய்வு செய்யவுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்