லாக்கை லாவகமாக உடைத்து பைக் திருட்டு....! - சிசிடிவி காட்சிகள்

x

சேலம் அருகே இரண்டு லட்ச ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பண்ணப்பட்டியை சேர்ந்த சேர்ந்த்வர் இந்திரன்.

இவர் தனக்கு சொந்தமான 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான இருசக்கர வாகனத்தை வீட்டின் வாயிலில் நிறுத்தி விட்டு தூங்க செனறார்.

மறுநாள் காலயில் எழுந்து பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பது தெரியவந்தது.

இதுக்குறித்து சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த போது மர்ம நபர்கள் இருவர், திருட்டில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

இதுக்குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்