16 வயது சிறுமியை 2வது முறை கடத்திய இளைஞரின் வீடு திடீரென தீப்பிடிப்பு - வீடியோ வெளியிட்டு அதிர வைத்த சிறுமி

x
  • கடலூர் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை இரண்டாவது முறையாக கடத்தி சென்றவரின் வீடு திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • பண்ருட்டி அடுத்துள்ள தொரப்பாடி பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி.
  • இவர் அருகிலுள்ள ஆரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வரும் நிலையில், சிறுமியை காணவில்லை என அவரது பெற்றோர் போலீசில் புகாரளித்தனர்.
  • விசாரணையில், அதே கிராமத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவர் சிறுமியை கடத்தி சென்றது தெரியவந்தது.
  • மேலும், இதே சிறுமியை மணிகண்டன் ஏற்கெனவே கடத்தி சென்றதும், இதனால் அவர் போக்சோவின் கீழ் கைது செய்யப்பட்டது சிறையில் அடைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில், இரண்டாவது முறையாக சிறுமியை கடத்தி சென்றவரை போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென மணிகண்டனின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
  • இதில், கடத்தப்பட்ட சிறுமியின் தரப்பினர் தான் வீட்டை எரித்ததாக மணிகண்டனின் தாய் போலீசில் புகாரளித்தார்.
  • இந்நிலையில், தான் கடத்தப்படவில்லை எனவும், தன்னை யாரும் தேட வேண்டும் எனவும் சிறுமி அனுப்பிய வாட்ஸ் ஆப் வீடியோ வெளியாகியுள்ள நிலையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்