மது அருந்த பணம் கேட்டு தகராறு..தாய், அண்ணன் மீது கத்தியால் தாக்குதல்

சென்னை திருவொற்றியூர் சாத்துமாநகரை சேர்ந்த குமரன் என்பவர், தனது தந்தையிடம் மது அருந்த பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது தடுக்க முயன்ற தனது தாயை கத்தியால் தாக்கிய அவர், சத்தம் கேட்டு வந்த தனது அண்ணனையும் கத்தியால் தாக்கிவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், குமரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். 

X

Thanthi TV
www.thanthitv.com