குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக இத்தனை கிலோ தங்கமா? - வெளியான தகவல்

x

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கோயிலுக்கு சொந்தமாக 263 கிலோ தங்கமும், 6 ஆயிரத்து 605 கிலோ வெள்ளியும் இருப்பதாக, கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. எம்.கே.ஹரிதாஸ் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோயிலின் சொத்து விவரம், வங்கி கணக்கில் உள்ள பணம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு மனு அளித்தார். அதற்கு பதில் அளித்த கோயில் நிர்வாகம் முதலில் தங்கம், வெள்ளி குறித்த கணக்கை தெரிவிக்க மறுத்தது. ஹரிதாஸ் மேல்முறையீடு செய்த நிலையில், தற்போது அந்த விவரங்களை கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்