பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

x

பல உயிர்களை பறித்த பாலம் விபத்து - முதல்வர் நேரில் ஆய்வு

குஜராத் முதலமைச்சர் பூபேந்திரபாய் படேல், மோர்பியில் தொங்கு பாலம் விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்டார். பின்னர், காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நபர்களையும் அவர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள், காவல்துறை, மருத்துவத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொண்டார். இதனிடையே, விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்த உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்க்வி, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.


Next Story

மேலும் செய்திகள்