"என் தூக்கமே போச்சு" - கடைசி ஓவர் சம்பவம்.. புலம்பிய மோஹித் சர்மா | Mohit Sharma | IPL

ஐபிஎல் இறுதிப்போட்டியில் கடைசி ஓவரை வீசிய குஜராத் பவுலர் மோஹித் சர்மா எதையோ இழந்ததுபோல உணர்வதாக கவலை தெரிவித்து உள்ளார். மோஹித் வீசிய கடைசி பந்தில் ஜடேஜா ஃபோர் அடித்து சென்னையை த்ரில் வெற்றி பெற வைத்தார். இதன்பிறகு மிகவும் உடைந்துபோய் காணப்பட்ட மோஹித் சர்மா, இது தொடர்பாக கருத்து தெரிவித்து உள்ளார். தன்னால் முடிந்த அனைத்தையும் தான் செய்ததாகவும், பந்து எங்கே விழக்கூடாதோ அங்கே போய் விழுந்ததாகவும் கூறி உள்ளார். தன்னால் தூங்க முடியவில்லை என்றும், எதையோ இழந்ததுபோல உணர்வதாகவும் உருக்கமாக அவர் பேசி உள்ளார். இதைக் கடந்து வர முயற்சிப்பதாகவும் மோஹித் கூறி உள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com