'காவலர் குடும்ப விழா'... தொடங்கி வைத்த சென்னை கமிஷனர் - Vibe செய்த காவலர்களின் குழந்தைகள்

x

சென்னை பெருநகர காவல் தெற்கு மண்டலத்தில் பணிபுரியும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பங்கேற்ற ''காவல் குடும்ப விழா'' நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது.

சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், விழாவினை தொடக்கி வைத்ததோடு, போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினார்.

இதில் கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா, தெற்கு மண்டல இணை ஆணையர் சி.பி.சக்கரவர்த்தி, வடக்கு மண்டல இணை ஆணையர் ரம்ய பாரதி ஆகியோர் பங்கேற்றனர்.

மேலும், திரை நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டு, காமெடி நிகழ்ச்சி மூலம் அனைவரையும் சிரிக்க வைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்