"நாங்கள் ஒன்னும் சளச்சவங்க இல்ல சீறிப்பாயும் சீரகம்" காய்க்கறிக்கு நிகராக போட்டிபோடும் மளிகை பொருள்கள்

x

சென்னையில் பூண்டு, சீரகம், கடுகு உள்ளிட்ட அத்தியாவசிய மளிகை பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இது குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு..

சென்னையில் கடந்த மூன்று வாரங்களாக காய்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. அந்த அதிர்ச்சியிலிருந்து மீள்வதற்குள் அடுத்த அடியாக இறங்கியுள்ளது மளிகை பொருட்களின் விலை உயர்வு.

காயகறிகளுக்கு சற்றும் சளைக்காமல் மளிகை பொருட்களின் விலையும் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.

குறிப்பாக கடந்த மாதம் கிலோ 200 ரூபாய் முதல் 250 வரை விற்று வந்த சீரகம் இன்று 700 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

கிலோ 100 ரூபாய்க்கு விற்று வந்த பூண்டின் விலை இன்று 190 முதல் 250 வரை விற்கப்படுகிறது.

கிலோ 400 ரூபாய்க்கு விற்ற மிளகு இன்று 540 ரூபாய்க்கும், 190 ரூபாய்க்கு விற்ற சோம்பு இன்று 360 ரூபாய்க்கும், 110 ரூபாய்க்கு விற்ற புளி இன்று 175 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

நல்லெண்ணெய் ஒரு லிட்டர் 300 ரூபாய்க்கு விற்று வந்த நிலையில் இன்றைய நிலவரப்படி 440 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இதே போல் மிளகாய் தூள், சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மிளகாய் வற்றல் உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அரிசி விலையும் வெகுவாக உயர்ந்துள்ளது.

பெட்ரோல், கேஸ் , மின்கட்டணம் என அடுத்தடுத்து அச்சுறுத்திய நிலையில் தற்போது காய்கறி மற்றும் மளிகை பொருட்களின் விலைகளும் அதிகரித்துள்ளதால் தாங்கள் குடும்பம் நடத்தவே முடியாத சூழலில் உள்ளதாக மக்கள் அதிருப்தி தெரிவிக்கிறார் நெவில்.

மளிகை பொருட்கள் பெரும்பாலும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரபிரதேச மாநிலங்களில் இருந்து தான் வருவதாகவும், அவர்கள் உக்ரைனுக்கு ஏற்றுமதி செய்து வருவதால் தமிழகத்துக்கு வரத்து குறைந்துள்ளதாகவும் இதுவே விலை ஏற்றத்துக்கு முக்கிய காரணம் எனவும் இப்போதைக்கு விலை குறைய வாய்ப்பில்லை எனவும் தெரிவிக்கின்றனர் வியாபாரிகள்.

காய்கறிவிலையும், மளிகை பொருட்களின் விலையும் ஒருசேர உயர்ந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுக்கள் கோரிக்கையாக உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்