"உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கிடுக" - கேரள மாநில திமுகவினர் தீர்மானம் | Udhayanidhi

உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும் என, கேரள மாநில திமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள கோவளம் அரசு விருந்தினர் மாளிகையில் கேரள மாநில திமுக அமைப்பாளர் கே.ஆர்.முருகேசன் தலைமையில் திமுக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்கி கவுரவிக்க வேண்டும், கேரளாவின் 14 மாவட்டங்களில் கருணாநிதி சிலை நிறுவிட வேண்டும் என்பது உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X

Thanthi TV
www.thanthitv.com