மதுரையில் அதிநவீன வசதிகளுடன் பிரம்மாண்ட கலைஞர் நூற்றாண்டு நூலகம் இன்று திறப்பு
மதுரையில் கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாலை திறந்து வைக்கிறார்.
மதுரை புதுநத்தம் சாலையில், 215 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உலகத்தரம் வாய்ந்த அளவில், நவீன வசதிகளுடன் கலைஞர் நூற்றாண்டு நூலகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளுக்கான பிரத்யேக நூலகம், விமானம் மற்றும் இயற்கைச் சூழலில் படிப்பது போன்ற அமைப்புகள் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் உரையாடுவது போன்ற 'விர்ச்சுவல் ரியாலிட்டி' அறைகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று மதுரை செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், இன்று மாலை கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைக்கிறார்.
Next Story
