பெண்களின் கூந்தலை பிடித்து இழுத்து..பூட்ஸ் காலால் எட்டி உதைத்து..போலீசின் அட்டூழியம்-பரபரப்பு வீடியோ

x

சத்தீஸ்கரில், ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்த பெண்களின் கூந்தலை பிடித்து இழுத்து காவல்துறையினர், தங்கள் பூட்ஸ் காலால் எட்டி உதைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் சூரஜ்பூர், தில்சிவா கிராமத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக, போலீஸ் பாதுகாப்புடன் வருவாய்த்துறையினர் சென்றனர். இதற்கு பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால் ஆத்திரமடைந்த காவல்துறையினர், அங்கிருந்த பெண்களின் கூந்தலை பிடித்து இழுத்து, தங்களது பூட்ஸ் கால்களால் எட்டி உதைத்தனர். இந்த விவகாரத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளை பெண்கள் சிலர் தாக்கியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.


Next Story

மேலும் செய்திகள்