புத்திமதி சொன்ன பேருந்து ஓட்டுநர்.. அடிக்க ஆட்களை கூட்டு வந்த பள்ளி மாணவன் - சென்னையில் பரபரப்பு

x

அரசு பேருந்தில் படிக்கட்டில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவர்களை கண்டித்த ஓட்டுநரை தாக்க ஆட்களை அழைத்து வந்த பள்ளி மாணவர்களின் செயல் குன்றத்தூரில் பரபரப்பு ஏற்பட்டது.

வடபழனியில் இருந்து குன்றத்தூர் சென்ற பேருந்தில் இரவு நேரத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் ஏறியுள்ளனர். இருக்கைகள் காலியாக இருந்தும் அமராமல் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்ததால், ஓட்டுநர் பள்ளி மாணவர்களை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள் பேருந்தின் கதவை சேதப்படுத்திவிட்டு பின்னர் கீழே இறங்கியுள்ளனர். பின் போன் செய்து சிலரை வரவழைத்த மாணவர்கள் குன்றத்தூர் பேருந்து நிலையத்திற்கு அவர்களுடன் சென்று ஓட்டுநரை தாக்க முற்பட்டுள்ளனர். அப்போது அங்கிருந்த மாணவர்களுக்கும், ஒட்டுநர்களுக்கும் இடயே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பானது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் பள்ளி மாணவர்களை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரவி வருகிறது.


Next Story

மேலும் செய்திகள்