மருத்துவரை தாக்கி 4 சவரன் நகை கொள்ளையடித்த அரசு ஊழியர் - குமரியில் அதிர்ச்சி சம்பவம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே, வைத்தியரை தாக்கி நகை பறித்ததாக, அரசு ஊழியர் உள்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். செம்பொன்விளை பகுதியில் உள்ள நாட்டு மருத்துவ வைத்தியசாலைக்குள் நுழைந்த நபர்கள், வைத்தியர் ஜார்ஜ் என்பவரை தாக்கி விட்டு, நான்கு சவரன் நகையை திருடிச் சென்றதாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த குளச்சல் போலீசார், பொற்றைவிளையை சேர்ந்த அரசு ஊழியர் அபிஷேக் உள்பட நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வைத்தியரை தாக்கி நகை பறித்துச் சென்றது தெரியவந்தது.

X

Thanthi TV
www.thanthitv.com