2 நாளாக முடங்கிய அரசு கேபிள் டிவி...தனியார் நிறுவனம் மேலாளர் அதிரடி கைது

x

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை மென்பொருளை பராமரித்து வரும் தனியார் நிறுவனம் சட்டவிரோதமாக செயலிழப்பு செய்ததால், கடந்த இரண்டு நாள்களாக சேவையில் பாதிப்பு ஏற்பட்டது என்று அரசு கேபிள் டிவி நிறுவனம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசு கேபிள் டிவி செட்டாப் பாக்ஸ்களின் கட்டுப்பாட்டு மென்பொருளை இணைய வழியில் அத்துமீறி நுழைந்து செயலிழப்பு செய்த அந்த நிறுவனத்தின் மீது குற்ற வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மேலாளர் ராஜன் கைது செய்யப்பட்டுள்ளார்.தகவல் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப குழுவின் உதவியுடன் பாதிக்கும் மேற்பட்ட செட்டாப் பாக்ஸ்கள் தற்பொழுது சரி செய்யப்பட்டுள்ளன என்றும், கேபிள் ஆபரேட்டர்கள் நேரடியாக செட்டாப் பாக்ஸ்களில் சில மாற்றங்களை செய்து தற்காலிக தீர்வை ஏற்படுத்திக் கொடுத்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மென்பொருள்களை வழங்கிய முதன்மை நிறுவனத்திடம் இருந்து அதை நேரடியாகப் பெறுவதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்