அரசு கலை, அறிவியல் படிப்பு - தரவரிசை பட்டியல் வெளியீடு

x

தமிழகத்தில், அரசு கலை, அறிவியல் பட்ட படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படுகிறது. அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் கடந்தாண்டை காட்டிலும் இந்தாண்டு குறைவான மாணவ, மாணவிகளே விண்ணப்பித்தனர். கடந்தாண்டு நான்கு லட்சத்து 11 ஆயிரத்து 679 பேர் விண்ணப்பித்த நிலையில், இந்த ஆண்டு மூன்று லட்சத்து 14 ஆயிரத்து 66 பேர் மட்டுமே விண்ணப்பித்தனர். இதனிடையே, அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளுக்கும் தரவரிசை பட்டியல் இன்று அனுப்பி வைக்கப்பட உள்ளது.

விண்ணப்பித்த மாணவர்கள், ஆன்லைன் மூலமாகவும் தங்களது தரவரிசையை உறுதி செய்யலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்