"பொங்கல் பண்டிகையால் ஆளுநர் மாளிகை 'மினி தமிழ்நாடு' போல் இருக்கிறது" - ஆளுநர் ஆர்.என்.ரவி

x

கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற பொங்கல் விழாவில், 'மினி தமிழ்நாடு' போல் உள்ளது என ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.

Vovt

சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் பொங்கல் பெருவிழா நிகழ்ச்சி நடந்தது.

இதில் திமுக அமைச்சர்கள், திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் பா.ம.க. சார்பில் யாரும் பங்கேற்கவில்லை.

முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

கலை நிகழ்ச்சியில் பங்கேற்ற கலைஞர்களுக்கு சால்வை அணிவித்து, தமிழில் பொங்கல் வாழ்த்துக்களை கூறி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர், இங்கு நடைபெற்ற பொங்கல் விழா மினி தமிழ்நாடு போல இருந்தது என குறிப்பிட்டு பேசினார்.


Next Story

மேலும் செய்திகள்