ஆளுநர் தமிழிசையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்காத காரணம் - புதுச்சேரி முதல்வர் சொன்ன உண்மை

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி நேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

சுவாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில் புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சிக்காக நானும் ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனும் ஒற்றுமையாக செயல்பட்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.

ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொள்வதில்லையே என்ற செய்தியாளரின் கேள்விக்கு "தனக்கு, வேறு பல நிகழ்ச்சிகள் இருந்திருக்கும். அதனால் தான் கலந்து கொள்ளாமல் சென்றிருப்பேனே தவிர, வேறு எதுவுமில்லை" என்றும் கூறிச் சென்றார்.


Next Story

மேலும் செய்திகள்