"மூன்றாம் தர அரசியலை ஆளுநர் செய்ய வேண்டாம்" - சபாநாயகர் அப்பாவு பேச்சு

கோவை மாவட்டம் சூலூரில் நடைபெற்ற வர்த்தக சங்க நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு பங்கேற்றதுடன் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் பேசிய அவர்,மூன்றாம் தர அரசியலை தமிழக ஆளுநர் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொண்டார். தந்திடிவியின் விவாத நிகழ்ச்சிகளில் தொடர்ந்து வலியுறுத்தி வந்ததன் காரணமாக கோவை வெட்கிரைண்டர்களுக்கு நான்கு சதவீத ஜிஎஸ்டி வரி விலக்கு கிடைத்தது என்றும் சபாநாயகர் தெரிவித்தார்.

X

Thanthi TV
www.thanthitv.com