இளைஞர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை

x

தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைகழகத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஆளுநர் ஆர்.என்.ரவி, 339 மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆளுநர், சுதந்திர இந்தியாவில் 75 ஆண்டுகளில் பல சாதனைகளை செய்துள்ளோம் என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இதைவிட வேகமாக உழைக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மாறுபட்ட புதிய சிந்தனைகளை உருவாக்கி நாட்டை முன்னேற்ற பாதையில் கொண்டு செல்ல இளைஞர்கள் முன்வர வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்